பிலியந்தலை பொரலஸ்கமுவ பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்திட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.