மலேசிய அரசாங்கத்தால் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கே? வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

254

மலேசிய அரசாங்கத்தால் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கே என கேள்விஎழுப்பியுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

இன்றையதினம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டபெண்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலில்தலைமை வகித்த வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது உரையிலையே அவ்வாறுகேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு மலேசியா தமிழர் பேரவைக்கு மலேசியஅரசாங்கம் பல இலட்சம் அமேரிக்க டொலர்களை வழங்கி இருந்தது. அது போரினால்பதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக அந்த நிதி தொடர்பாக நானும் பல இடங்களில்கேட்டிருந்தேன். இவ்வாறான நிதி கிடைத்திருக்கிறதா வாழ்வாதார உதவிகிடைத்திருக்கிறதா என உங்களில் யாருக்காவது கிடைத்திருந்தால் சொல்லுங்கள்.

கடந்தகிழமை என்னிடம் ஆதாரங்கள் திரட்டப்பட்டு இருந்தமையால் இந்த நிதிக்கு என்னநடந்தது களவெடுத்ததாக சொல்லவில்லை. எமது நிதிக்கு என்ன நடந்தது என மலேசியஅரசாங்கத்திடம் கேட்டிருந்தேன். மலேசிய பத்திரிகைகளில் நான்கு ஐந்து நாட்களாகஇது முன்பக்கச் செய்தியாக இருக்கிறது. எமது பெயரை பாவித்து பல நிறுவனங்கள்நிதிகளை பெற்று செல்கிறார்கள். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனதெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த ஒருவர் மலேசியா தமிழர் பேரவையினரால் வாழ்வாதாரதிட்டங்கள் வழங்குவதாக கூறி கிளிநொச்சி மாவட்டத்தில் பெயர் விபரங்கள்பெறப்பட்டது எனவும் பின்பு இத்திட்டம் அரசாங்கத்தினால் தடுக்கப் பட்டுள்ளதுஎனவும் ஏன் என்றால் தனிப்பட்ட முறையில் இவ் உதவித்திட்டங்கள் வழங்க முடியாதுஎனவும் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இன்று காலை பத்து . முப்பது மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபைமண்டபத்தில் நடைபெற்ற இன் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்,போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் இதுபோன்றபோரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம் வழங்குதல் தொடர்பானகலந்துரையாடல ஒன்று கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலும் இன்று பிற்பகல் இரண்டுமணியளவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

 

 

 

 

SHARE