“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழி. ஆடை நாகரிகத்தின் நல்லிணக்கமாக திகழ்கிறது. உலக நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கிய தமிழ்ச்சமூகம் உடையை மானம் காக்க உருவாக்கியது.
நாளடைவில் உடையே நமது சமூகத்தின் கலாசார குறியீடாக மாறி விட்டது.
ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு நமது பாரம்பரிய உடையாக வேட்டி, சேலை இருந்து வந்தது. அவர்களின் வருகைக்குப்பின் நமது நடை, உடை, பாவனை என அனைத்திலும் அவர்களின் தாக்கம் அதிகரித்தது.
ஆனால், அவர்கள் இன்று நமது கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
ஆங்கிலேயப் பெண்கள் சேலை உடுத்தி வருவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் சிறந்து வாழும் வழிமுறைகளை நம்மைவிட அதிகமாக அவர்கள் பின்பற்றத் தொடங்கி விட்டதைப் பார்க்கும்போது நமக்குச் சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது.