இயக்குனர் அட்லீ தயாரிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

264

இயக்குனர் அட்லீ தயாரிக்கும் முதல் படமான ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலாமன இயக்குனர் அட்லீ தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஐசக் இயக்கியுள்ளார். அட்லீ துவங்கியுள்ள ‘ஏ ஃபார் ஆப்பிள்’ தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகவுள்ள இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் ஜீவா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். பழனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.  இப்படத்திற்கு ‘ஜில் ஜங் ஜக்’ பட இசையமைப்பாளர் விஷால் சத்திரசேகர் இசையமைத்துள்ளார்.download (1)

SHARE