சாய் பல்லவி மணிரத்னத்தை அடுத்து அஜீத்தின் தல 57 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்துள்ளார். தமிழ் பெண்ணான சாய் பல்லவியை திரையுலகினர் திரும்பி பார்க்க வைத்தது பிரேமம் மலையாள படம் தான். அந்த படத்தில் அவர் மலர் டீச்சராக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
டாக்டருக்கு படித்துள்ள சாய் பல்லவி தன்னை தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்பது இல்லை. இந்நிலையில் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க பல்லவிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவரோ மணிக்கு நோ சொல்லிவிட்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல 57 படத்தில் மூன்று ஹீரோயின்கள். அதில் ஏற்கனவே காஜல் அகர்வால் உறுதி செய்யப்பட்டுவிட்டார். இந்நிலையில் சாய் பல்லவியிடம் அஜீத்துடன் நடிக்க கேட்டார்களாம். அதற்கும் அம்மணி முடியாது என்று கூறிவிட்டாராம். அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசையாக உள்ளது என்று பல நடிகைகள் கூறி வரும் நிலையில் பல்லவி இப்படி செய்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த பொண்ணு என்ன வர பெரிய வாய்ப்பை எல்லாம் இப்படி தட்டிக்கழிக்கிது என்றும் சிலர் கூறுகிறார்கள்.