பாகுபலி 2 படத்தின் தமிழக தியேட்டர் உரிமை மட்டும் ரூ. 45 கோடிக்கு போயுள்ளதாம். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த படம்.
பிரமாண்டத்திற்கு பெயர் போன பாலிவுட்காரர்களையே மிரள வைத்த படம் பாகுபலி. இந்நிலையில் ராஜமவுலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. இந்நிலையில் பாகுபலி 2வின் தமிழக தியேட்டர் உரிமை ரூ.45 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வாங்கியது யார் என்ற விபரத்தை தெரிவிக்க படக்குழுவினர் மறுத்துவிட்டனர். படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சண்டை காட்சியை வைத்துள்ளாராம் ராஜமவுலி. அந்த சண்டை காட்சி மட்டுமே அரை மணிநேரம் ஓடுமாம்.