அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சிங்கள மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சிங்கள மாணவர்களின் பெற்றோர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்டவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது ஜனாதிபதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, சிங்கள மாணவர்கள் பயமின்றி தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என்று மாணவர்களின் பெற்றோர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோதல் மற்றும் அதன் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கலந்தாலோசித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்! ஜனாதிபதி
யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தமது கல்வியில் கவனம் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், வன்முறை சம்பவங்கள் மீண்டும் பல்கலைக்கழகத்தில் இடம்பெறாதவண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
இதனையடுத்து தமது தீர்மானத்தை அறிவித்த ஜனாதிபதி, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் தமது கவனத்தை செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மாணவர்களுக்கான முழுமை பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.