மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் மாகாணசபையின் நிதி ஒதிக்கீட்டில் 1 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

236

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் மாகாணசபையின் நிதி ஒதிக்கீட்டில் 1 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபா செலவில் மெரைன் ரைவ் வீதி, 6 மில்லியன் ரூபா செலவில் மீன்பிடி இலாகா வீதி மற்றும் 2 மில்லியன் ரூபா செலவில் டெலிகொம் வீதியின் கபூர் ஒழுங்கை வீதி ஆகிய வீதிகளுக்கு செப்பனிடும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் செயலாளர் சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலப்பத்தி மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

SHARE