திருமணம் முடித்து மூன்று மாதமேயான நிலையில் மனைவி கனவனால்தீவைத்து கொலை.

251

1407074004_7001644_hirunews_Woman-with-burn-injuries-dies

அம்பாறை காரைதீவுப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் கணவரே தீ வைத்துக் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் திருமணம் முடித்து மூன்றுமாதம் எனவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்குக் காரணம் என்றும் தெரிய வருகின்றது.

சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் கணவரான குகதாசன் (வயது 32) என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE