காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த கமலஹாசன், இன்று வீடு திரும்பினார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்…
கமலஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மாடிப் படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3 வார காலமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமலஹாசனுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படவே, இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய கமல்ஹாசன் இன்னும் சில நாட்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளவிருக்கிறார். ஓய்வுக்கு பிறகு ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.