ஏறாவூர் சித்தாண்டிக் கிராமப் பகுதியில் மரை இறைச்சியைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது

258

download (1)

மட்டக்களப்பு, ஏறாவூர் சித்தாண்டிக் கிராமப் பகுதியில் மரை இறைச்சியைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக காட்டு விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசங்கள் விற்பனைக்காக எடுத்துவரப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திடீர் சோதனை மேற்கொண்டபோதே மரை இறைச்சியை வைத்திருந்த 47 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட மரை, மட்டக்களப்பு மற்றும் பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதி காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE