அரசுடன் இணையுமாறு கூறிய பிரதமருக்கு முத்தம் கொடுக்கவும் தயார்

307

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முத்தம்கூட கொடுக்கத் தயாரென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.  சிங்கள வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே  இவ்வாறு கூறியுள்ளார்   குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுக்காமல் இருக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் பக்கம் சார்ந்திருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அழைப்பு விடுத்ததாக  அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.  இந்த அழைப்பை விடுத்த பிரதமருக்கு முத்தம்கூட கொடுக்கத் தயார் என்று கூறிய கீதா குமாரசிங்க எம்.பி, அவரது அழைப்பை ஏற்று அரசாங்கத்துடன் இணைய தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

SHARE