வடக்கில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டதென்பது உண்மைக்கு புறம்பானது

254
வடபகுதியில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என கூறுவதானது ஒரு உண்மையான துரோகச் செயல் என வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ஜந்தாவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், ‘தொடர்ச்சியாக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதானது ஒரு துரோகச் செயலாகும்.
வடக்கில் தற்போது சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல மருத்துவ தாதி பயிற்சி கல்லூரியிலும் அவர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இடம்பெயர்ந்து சென்றிருந்த அரச ஊழியர்கள் மீண்டும் தங்களது இடங்களுக்கு திரும்பியுள்ளனர். அத்துடன் தற்போது வடக்கில் பௌத்த வணக்கஸ்தலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’ என தெரிவித்துள்ளார்
SHARE