உயர்தரப் பரீட்சையில் மோசடி: பெயர்கள் தடை பட்டியலில்

287
தற்போது  நடைபெற்றுவரும்  கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபவர்களின் பெயர்களை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதன்பிரகாரம் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லும் மாணவர்களுக்கு 5 வருட பரீட்சை தடை விதிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் இதுவரை 40 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE