மகளிர் ஹாக்கி: இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

232

ஒலிம்பிக் போட்டிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் ஜப்பானை வீழ்த்தியதன் மூலம் 5-ஆவது இடத்தைப் பிடித்த இந்திய அணி, ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 13-ஆவது இடத்திலும், ஜப்பான் அணி 10-ஆவது இடத்திலும் உள்ளன. இதற்கு முன்னர் 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, அதில் 4-ஆவது இடத்தை பிடித்தது.

SHARE