பொல்பிட்டியவில் பூமிக்குள் புதையுண்டது வீடு
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
பொல்பிட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்படும் போட்லண்ட நீர் மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும் சுரங்கத்தின் மேற்பகுதியிலுள்ள வீடொன்று பூமிக்குள் அமிழ்ந்துள்ளது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது புதிதாக அமைக்கப்பட்டு வரும் நீர் மீன் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதற்காக பொல்பிட்டியவிலிருந்து கித்துல்கலை வரை சுரங்கம் தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அணர்த்தம் ஏற்படலாம் என 12 குடியிருப்புகளிலிருந்த மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் அங்கு வாழ்ந்த மக்கள் பிரிதொருபிரதேசத்தில் தற்காளிகமாக குடியேறியுள்ள நிலையில் வெறுமையாக காணப்பட்ட 12 குடியிருப்புகளில் ஒன்றே 07.06.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் பூமிக்குள் முற்றாக புதையுன்டுள்ளது
குறித்த சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் வாழும் ஏனைய மக்களும் ஆபத்துக்கள் நேரலாமென அச்சம் வெளியிட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு கட்டிடங்களும் நீலங்களும் வெடிப்புக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிதக்கது