நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்த கணவர்!

223

muslim_wedding_hands

குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஒரு பிள்ளையுடன் குறித்த பெண், திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர் ஒருவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார்.

இரண்டாவது திருமணம் ஊடாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்த குறித்த பெண்ணின் அந்தத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவில்லை.

இதனால் குறித்த கணவர் மீகலாவே பகுதியைச் சேர்ந்த தமது நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.

பிள்ளைகளை விட்டு விட்டு குறித்த பெண் அந்த நபருடன் விருப்பத்துடன் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

பின்னர் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்தக் கணவரையும் விட்டு விட்டு தலகொலாவௌ என்னும் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபருடன் புதிய வாழ்க்கையைத் தொடர இந்தப் பெண் சென்றுள்ளார்.

இதன் போது தமது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தினால் குறித்த பெண் பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய பெண்ணை விற்பனை செய்த கணவர், வாங்கிய நபர் ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

SHARE