தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

247

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை பகுதியில் வீடொன்றில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கட்டுகஸ்தோட்டை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டாம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற இவரை இன்று காலை தீப் பற்றி நிலையில் பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.

இதையடுத்து பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதுடன் பொலிசார் குறித்த சடலத்தை மீட்டு கண்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சுமார் 30 வருடங்களாக இப் பிரதேசத்தில் வசித்துள்ள இவரது உரவினர்கள் பற்றி எதுவும் பிரதேச மக்களுக்குத் தெரியாதுள்ளது.

இவரது பெயர் கே.எஸ்;. ராஜா எனவும் கண்டி பன்விலை பகுதியைச் சேர்ந்தவரெனவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.dath

SHARE