நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை, சட்டமா அதிபரிடம்.

248

TlXk7eBX_400x400

பணச் சலவை சட்டமூலத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

றக்பி விளையாட்டை மேம்படுத்துவதாக கூறி நிறுவனம் ஒன்றிடம் பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கில் மேலும் சிலரிடம் வாக்கு மூலங்களை பெறவேண்டியுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

அத்துடன் மேலும் சிலரை வழக்கின் சந்தேகநபர்களாக சேர்க்குமாறும் அவர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன எதிர்வரும் ஒக்டோர் 31 ஆம் திகதி விசாரணைகளில் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE