அத்துமீறிய குடியேற்றங்களை வேடிக்கை பார்க்கும் அரசு! – கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜாசிங்கம்

276

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அத்துமீறிய குடியேற்றத்தை தடுக்க பலர் ஆர்வம் காட்டவில்லை என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜாசிங்கம் தெரிவித்தார்.

செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குப்பட்ட வந்தாறுமூலை வேக்கவூஸ் வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே இவர் இதனைக் கூறினார்.

மேலும், அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மைச் சமூகத்தினர் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வன பரிபாலனசபைக்கு தெரிவித்தும் ஏதும் நடைபெறவில்லை. வன ஜீவராசிகள் திணைக்களமும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது.

கால் நடை வளர்ப்பாளர்களுக்குரிய மேச்சல் தரைப் பிரச்சினை நீண்டகாலமாக இருந்துவருகின்ற நிலையில் மாதவனை மற்றும் மயிலத்தமடு போன்ற பிரதேசங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது என கி. துரைராஜாசிங்கம் குற்றம் சுமத்தினார்.

SHARE