கிர்ரிஸ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச பெற்ற 70 மில்லியன் ரூபாய்கள் தொடர்பானவிசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில்.

229

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

இந்திய ரியல் எஸ்டெட் நிறுவனமான கிர்ரிஸ் லங்காவிடம் இருந்து பெறப்பட்டதாககூறப்படும் பல மில்லியன் ரூபாய்கள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கிர்ரிஸ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச பெற்ற 70 மில்லியன் ரூபாய்கள் தொடர்பானவிசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயத்தைநிதிமோசடி தடுப்பு பொலிஸ்பிரிவு மன்றில் அறிவித்துள்ளது.

இதன்படி புத்தளத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணம் ஒன்றை தயாரித்த,இலங்கை சுற்றுலாசபையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, அதனை இந்திய நிறுவனத்துக்குவழங்குவதாக கூறி 40 மில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைதவிர இந்த விடயத்தின்போது திட்டவரைபை தயாரித்துக் கொடுத்த தினுஸ தேவாந்தி,போலி ஆவணத்தை தயாரித்த சட்டத்தரணி சுஜித் ரோஹித்த பெரேரா மற்றும் அவருக்கு உதவியஅப்துல் பதுருதீன் ஆகிய தனிப்பட்டவர்கள், இந்திய நிறுவனத்திடம் இருந்து 7 மில்லியன்ரூபாய்களை பெற்றுள்ளனர்.

SHARE