பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார்.

723

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 68. எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ல் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய கம்யூட்டர் காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. மறைந்த ஜோதிலட்சுமி இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காலத்தை வென்றவன் நீ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த அடிமைப்பெண் படத்தில் ‘காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ…’ என்ற பாடலுக்கும் நடனம் ஆடி பிரபலமானார். மேலும் எம்.ஜி.ஆருடன் ரிக்சாக்காரன், நீரும் நெருப்பும், தேடிவந்த மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்

சிவாஜி – ஜெய்சங்கர் பூவும் பொட்டும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், விக்ரம், கார்த்தி உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார்.

ரத்தப் புற்றுநோய் ஜோதிலட்சுமிக்கு ரத்த புற்று நோயால் அவதிப்பட்டார். கடந்த ஒரு மாதமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சீரியல்களிலும் நடித்து வந்தார் இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

சேலைகளின் நாயகி ரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தும் அதைப் பற்றியே சுவடே எதுவும் இன்று சீரியல்களில் நடித்து வந்தார். வள்ளி சீரியர்களில் அவர் அணியும் புடவைகளுக்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாக மாறியுள்ளனர். ஒவ்வொரு எபிசோடிலும் ஜோதிலட்சுமியை பார்க்கவே வள்ளி சீரியல் பார்த்தவர்கள் உள்ளனர்.

ஜெயமாலினியின் அக்கா மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜெயமாலினி என்ற தங்கையும் ஜோதிமீனா என்ற மகளும் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளது.jyothilakshmi

 

10

 

SHARE