நேபாள பெண்களை கடத்தும் இலங்கை ஆட்கடத்தல்காரர்கள்! அதிர்ச்சி தரும் பின்னணி என்ன?

248

201509100320134346_2-NepalWomenRapedSaudi-Ambassador_SECVPF

நேபாளத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாளத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக 79 புலம்பெயர் தொழிலாளர்களை நேபாள அதிகாரிகள் மீட்டுள்ளதாக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து 19 நேபாள பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பங்களாதேஷிலிருந்து 60 புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டுள்ளதாகவும் நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் Bharat Raj Paudyal கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் பெண்களே என பொலிஸ் சிரேஸ்ட கண்காணிப்பாளர் Sarbendra Khanal தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 22 பெண்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நேபாள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நேபாளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனிதக் கடத்தல்காரர்கள் நேபாளத்தில் உள்ள பெண்களை வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபோர் தீவுகள் ஊடாக கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இலங்கைக்கு கடத்தப்பட்ட பெண்களை இலங்கை பொலிஸாரின் உதவியுடன் மீட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு வழியின் ஊடாக பெண்களை கடத்தி வருவதாக நேபாளம் பொலிஸார், இலங்கைக்கு அறிவித்ததை அடுத்து இலங்கை பொலிஸார் கண்காணிப்பை மேற்கொண்டு வந்தனர்.

நேபாள பெண் தொழிலாளர்களை பெரும்பாலும் மலேசியா மற்றும் பிற நாடுகளுக்கு வேலைக்கு அமர்த்தும் நோக்கில் கடத்தல்கள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்துடன் இந்த விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நேபாள அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நேபாள வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் Bharat Raj Paudyal கூறியுள்ளார்.

இதற்கிடையில், பங்களாதேஷ் டாக்காவில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 44 நேபாள பிரஜைகள் நேற்றைய தினம் நேபாளத்தை சென்றடைந்துள்ளனர்.

இந்த கடத்தல்காரர்கள் தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE