புத்தளம் மற்றும் காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாய்லாந்தின்
முக்கிய சீமெந்து உற்பத்தி நிறுவனமான சியாம் சிட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி Siva Mahasandana அவர்கள் உள்ளிட்ட முன்னணி அதிகாரிகள்
சிலர் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தனர்.
இலங்கை இன்று அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி வேகம் இதன்போது இத்தூதுக் குழுவினரால்
பாராட்டப்பட்டதுடன்> இலங்கை இன்று முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாடு என்றும்
எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல முதலீடுகளை செய்வதற்கு தமது நிறுவனம் விருப்பத்தோடு
உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் நிலவும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தூதுக்
குழுவினருக்கு விரிவாக விளக்கினார்.
இலங்கையின் தாய்லாந்து தூதுவரும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.08.09