அரச நிர்வாகம் குறித்து ‘அ’ அல்லது ‘ஆ’ கூட தெரியாதவர்கள-அரசை கிண்டலடிக்கிறார் விமல்

263
திருட்டு வழியில் வரி பெறச் சென்று, அரசாங்கத்திற்கு கிடைத்த வரியும் இல்லாது போயுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இவர்கள் நாட்டின் சட்டம் அல்லது அரச நிர்வாகம் குறித்து ‘அ’ அல்லது ‘ஆ’ கூட தெரியாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விமல் வீரவங்ச இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்திலேயே இந்த சட்டமூலம் நீதிமன்றத்தினால் பலமற்றதாக ஆக்கப்பட்டதாகவும், பின்னர் பொய்யாக மற்றுமொரு சட்ட மூலத்தை கொண்டு வரவுள்ளதாகவும், அதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெறாது எனவும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
SHARE