இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் நேபாள பிரஜைகள் குறித்து விசாரணை

234
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருக்கும் நேபாளப் பிரஜை கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்தார்கள் என்றக் குற்றச்சாட்டில், அண்மையில் 19 நேபாளப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் உரிய முறையில் விசா இன்றி தங்கியிருந்தமைக்காக, குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில், இலங்கையில் போதைப் பொருள், மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் பரவலாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதுமாத்திரமன்றி பல்வேறான வெளிநாட்டு பெண்கள் இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குறித்தும் பல குறச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இவ்வாறன ஒரு நிலையிலேயே இலங்கை அரசாங்கம் நேபாளப் பிரஜைகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, பெரும் எண்ணிக்கையிலான நேபாளப் பெண்கள் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
SHARE