மாணவிகள் துஷ்பிரயோக வழக்கின் இரண்டாவது நபரும் சிக்கினார்!

242

கண்டி, ஹந்தானை பிரதேசத்தில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் வதிவிட பயிற்சி முகாமில் இடம்பெற்ற மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரை இன்று கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் தலைமைத்துவப் பயிற்சி நிலையத்தின் தலைவர் சந்திமல் கமகே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டாவது சந்தேகநபரை இன்று கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE