வெளிநாட்டு அரண்மனையில் கைவரிசையை காட்டிய இலங்கை பெண்கள்!

219

இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக டுபாய்க்கு சென்ற இரண்டு பெண்கள் டுபாயை ஆளும் குடும்ப உறுப்பினரின் அரண்மனையில் திருடியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

மேலும், இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் இந்த பத்திரிகையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததுடன்,இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பணிப்பெண் அரண்மனையில் இருந்து நகைகள் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகளை இரண்டு பெண்களின் வற்புறுத்தலின் பேரில் திருடியுள்ளார்.

மேலும், மற்ற பெண் திருடிவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டே தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE