சூர்யாவின் பேரழகன் பட இயக்குனர் சசி சங்கர் மரணம்

253

சூர்யாவின் பேரழகன் பட இயக்குனர் சசி சங்கர் மரணம் - Cineulagam

சர்க்கரை நோயாளியான சசி சங்கர் இன்று தனது வீட்டில் சுயநினைவின்று விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சசி சங்கர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

சசி சங்கர் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர். 1993ல் நரயம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

SHARE