மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.11 பச்சிளம் குழந்தைகள் பலி..

603

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)

ஈராக் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

ஈராக்கின் பாக்தாத் நகரில் Yarmouk என்ற மருத்துவமனையில் பிரசவ வார்டில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் 11 பேர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் மின்கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து 21 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE