வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் – வீ.ஜயதிலக்க:

240

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் வீ.ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாண அமைச்சுக்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் மிக முக்கியமான சில அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE