காணாமற்போனோர் அலுவலகத்திற்கு வாக்களிப்போர் தேசத்துரோகிகள்

244
காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவளிப்போர் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவர் என மெதகொடஅயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு  ஆதரவளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைக்கப்படவுள்ள குறித்த அலுவலகமானது வேறு ஒரு தரப்பினரால் நிர்வகிக்கப்படவுள்ளதோடு,இதன்மூலம் நடைபெறும் செயற்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு கூட செல்லமுடியாது எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே எமது நாட்டு சோற்றினை உண்டு, பால் குடித்தவர்கள் எவராவது குறித்தசட்டமூலத்திற்கு கையை உயர்த்துவோர்களானால் அவர்கள் தேசத்துரோகிகள் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சட்டமூலமானது மேன்முறையீட்டு நீதிமன்றின் அதிகாரங்களைக் கொண்டஒன்றென பெங்கமுவே நாலக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த அரசை கவிழ்த்து வீட்டுக்குஅனுப்புவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்
SHARE