முதன்முதலாக பாலிவுட் படத்துக்கு வாழ்த்து கூறிய ரஜினி

298

முதன்முதலாக பாலிவுட் படத்துக்கு வாழ்த்து கூறிய ரஜினி - Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கபாலி படத்தின் வெற்றி களிப்பில் இருக்கிறார்.

ரஜினி பாலிவுட் பிரபலங்களுடன் சகஜமாக பழகக் கூடியவர். ஆனால் இதுவரை இவர் எந்த ஒரு பாலிவுட் படத்தையும் பாராட்டியோ, வாழ்த்துக்கள் கூறியோ டுவிட் செய்ததில்லை. இந்நிலையில் முதன்முறையாக அக்ஷய் குமார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள Rustom படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி டுவிட் செய்துள்ளார் ரஜினி.

இதனை பார்த்த அக்ஷய் குமாரும் ரஜினி டுவிட்டுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

அக்ஷய் குமார், ரஜினி நடித்துவரும் 2.0 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE