பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறு நிலையை எட்டி வருகிறது.
இதில் 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பல வீரர்களுக்கு தொடக்கமே ஏமாற்றமாக முடிந்துள்ளது.
அதே சமயம் பல வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை குறி வைத்து முன்னேறி வருகின்றனர். அமெரிக்க வீரர் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை 3 தங்கம் வென்று தன்னுடைய பதக்க பட்டியலை 25 ஆக உயர்த்தியுள்ளார்.
நேற்றைய தினத்தில் அசத்திய சில வீரர், வீராங்கனைகளை பற்றி பார்க்கலாம்.

ஆர்ட்டிஸ்ட் ஜிம்னாஸ்டிங் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனைகள் Gabrielle Douglas, Laurie Hernandez, Aly Raisman மற்றும் Simone Biles.
4×200 மீற்றர் தொடர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்கள் Michael Phelps, Ryan Lochte, Conor Dwyer மற்றும் Townley Haas.
200 மீற்றர் பட்டர்பிளை பிரிவில் அவர் 1 நிமிடம் 53.40 வினாடியில் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து தங்கம் வென்ற Michael Phelps தனது மகனை முத்தமிட்டு மகிழ்ந்தார்.
மகளிர் 200 மீற்றர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை Katie Ledeckyவை, 2வது இடம் பிடித்த சுவீடனின் Sarah Sjostrom கட்டியணைத்து பாராட்டினார்.
200 மீற்றர் தனி நபர் மகளிர் நீச்சல் போட்டியில் ஹங்கேரி நாட்டின் Katinka Hosszu தங்கம் வென்றார்.
நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒற்றையர் பிரிவிலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் 3வது சுற்றில் 4-6, 3-6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை Svitolinaவிடம் வீழ்ந்தார்.
எகிப்து மற்றும் இத்தாலி மகளிர் அணிகள் பீச் வாலிபாலில் ஆயத்த சுற்றில் மோதியது. அந்த அணிகளின் Doaa Elghobashy (எகிப்து), Laura Giombini (இத்தாலி) மோதிக் கொண்ட காட்சி.
தனி நபர் கனோ படகுப் போட்டியில் பிரான்ஸ் வீரர் Denis Gargaud Chanut தங்கம் வென்று வெற்றியை கொண்டாடினார்.
ஜப்பான் வீரர் Takuya Haneda தனி நபர் கனோ படகுப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்தப் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் ஆசிய வீரர் என்ற பெருமை பெற்றார்.
மகளிர் கால்பந்து போட்டியில் எப் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய உற்சாகத்தில் கனடா வீராங்னைகள்.