ஷேவாக்காக மாறிய அஸ்வின் வியப்பில் விராட் கோஹ்லி

246

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி கிரோஸ் இஸ்லடில் நடந்து வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி இந்திய அணி முதலில் விளையாடியது.

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரர் ராகுல் அரைசதம் அடித்தும், ரஹானே 35 ஓட்டங்களும் எடுத்தனர். 126 ஓட்டங்களுக்கே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அஸ்வின், சகா இருவரின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

அஸ்வின் 118 ஓட்டங்களும், சகா 104 ஓட்டங்களும் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 353 ஓட்டங்கள் எடுத்தது.

அஸ்வின் 297 பந்துகளை சந்தித்து 118 ஓட்டங்கள் எடுத்தார். அவர் சதத்தை எடுக்கும் போது ’சிங்கிள்’ எடுக்காமல் சிக்சர் விளாசி சதம் அடித்தார்.

பொதுவாக முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக் தான் சதம் அடிக்கும் போது சிக்சரால் சதம் அடிப்பார். தற்போது அஸ்வின் அதே பாணியில் சதம் அடித்துள்ளார்.

அஸ்வினின் இந்த அபார சதத்தை அணித்தலைவர் விராட் கோஹ்லி மைதானத்திற்கு வெளியே வியந்த படி ரசித்துக் கொண்டிருந்தார். அஸ்வினுக்கு இது 4வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE