யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழர் பாரம்பரியத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தழிழர் பாரம்பரிய கலைநிகழ்வுகளுக்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் சிங்கள மாணவர்களும் கற்றலில் ஈடுபடுவதால் அவர்களின் கலை நிகழ்வுகளுக்கும் ஓரு குறிப்பிட்ட இடம் வழங்கி முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நிரலில் இணைத்திருக்கலாம் எனவும் கெட்ட கலகம் நல்ல பலனைத் தந்துள்ளது என எண்ணுகிறேன் எனக் கூறினார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் கலகம் பற்றிய செய்தி முழு உலகிற்குமே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பல்லின, பன் மத, பன் மொழி நாடு என்ற உண்மையை பட்ட வர்த்தனமாக அறிவித்துள்ளது. ஆகவே கலகத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நன்றி என கூறியவர், நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.