அதிகரித்து வரும் றோலர் படகுகளால் பாதிப்படையும் குடாநாட்டு மீனவர்கள்

282
யாழ் குடாநாட்டு கடற்பகுதியில் அதிகரித்து வரும் றோலர் படகுகளால் சாதாரண மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ள மீனவர்கள்  இது தொடர்பாக  மேலும் தெரிவிக்கையில்
சமீப காலமாக யாழ்ப்பாண கடற்பகுதியில் குறிப்பாக குருநகர் இறங்குதுறைப் பகுதியில் அதிகமான றோலர் படகுகள் மீன் பிடியில் ஈடுபடுவதால் சாதாரண மீனவ குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாவதாக மீனவர்கள்   கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ் குருநகர் இறங்குதுறைப் பகுதியில் அதிகளவிலான றோலர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணத்தால் கடலிலுள்ள மீன்வளம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதாக சாதாரண மீன்பிடி நிலையில் உள்ள மீனவ குடும்பங்கள் தெரிவிகின்றன.
இது தொடர்பாக கடற்தொழிலாளர் திணைக்களத்தை தொடர்புகொண்டு கேட்டபோது இன் நிலை தொடர்பாக கவனம் செலுத்துவதாக கூறப்பட்டது.
SHARE