யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, யாழ்.மாவட்ட செயலகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஒன்றிணைந்த சேவைகள் மையத்திற்கான அலுவலகத்தை திறந்துவைத்தார்.
.jpg)
இந் நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.