முன்கூட்டியே தேர்தலை மகிந்த நடத்தியது ஏன்? விளக்குகிறார் ஜனாதிபதி

268
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்கொள்ளும் இயலுமை இல்லாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு 9 ஆயிரத்து 500 லட்சம் கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளது எனவும் இந்த கடன் பொறியில் இருந்து தப்பிப்பதற்காவும் முன்னாள் ஜனாதிபதி பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் தேர்தலை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் பெண் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கான பயிற்சி பாசறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நேர்முகப் பரீட்சைக்கு அனுப்பபட்ட கடிதங்களை கிழித்த முன்னாள் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் கட்சியில் இருந்து தாமாகவே விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
SHARE