தாய்லாந்தைச் சேர்ந்த முன்னணி சிமெந்து உற்பத்தி நிறுவனம் இலங்கையில் முதலிட தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
சியாம் சிற்றி என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதிநிதிகள் குழு இலங்கை தற்போது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருவதாகவும் முதலீடுகளை மேற்ககொள்வதற்கு சிறந்த நாடெனவும் எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள தமது நிறுவனம் ஆர்வமாகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இலங்கையில் முதலீட்டை மேற்ககொள்ளும் குறித்த கம்பனியின் விபரங்கள் தொடர்பாக ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். ஜனாதிபதியுடனான இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான தாய்லாந்து
தூதுவரும் உடனிருந்தார்.