அரணாயக்க திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடத்தின் கூரையில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் உள்ள வலயமாக பெயரிடப்பட்டுள்ள இடங்களில் மக்களை மீள குடியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு அண்மையில் அரநாயக்க பிரதேச செயலக அலுவலகத்தின் முன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அப்பகுதியில் இருந்த திவிநெகும திணைக்களத்தின் கட்டடத்தின் கூரையின் மேல் ஏறி குறித்த ஐவரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே, அரணாயக பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
அரச நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை, அங்கு அவர்களின் கடமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமை மற்றும் அரச பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாவனெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.