யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதாக கூறுகிறார்கள்?

283

வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சியா இது?

யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதாக கூறுகிறார்கள்?

யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ள இந்தியர்கள் யாழ்ப்பாணத்தை ஓர் வழியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்;கப்பட்டுள்ளது.

பொதுவாக பங்களாதேஸ் அல்லது டுபாய் வழியாகவே இதுவரை காலமும் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

எனினும், இந்தப் பாதைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதனால் யாழ்ப்பாணத்தை தெரிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் யாழ்ப்பாணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வடக்கை தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஒரு உத்தியாக இந்த தகவல் வெளியாகி உள்ளதா என கேள்வி எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE