
நாட்டுக்கு தாக்குதல் விமானங்கள் அவசியமானவை என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படை எட்டு தாக்குதல் விமானங்களையும் ஆயுதங்களையும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் சரியான தீர்மானமேயாகும் என அவர் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் எட்டு தாக்குதல் விமானங்கள் தேவைப்படுவதாக விமானப்படையினர் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானங்கள் அவசியமற்றவை என சிலர் கருதக் கூடும் என்ற போதிலும் தாம் இதனை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத அச்சுறுத்தல்கள் மற்றும் கடற் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விமானங்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விமானிகள் புதிய விமானங்களை செலுத்தி பழகிக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.