பொகவந்தலாவயில் மாடு வளர்ப்பு (பட்டி) கொட்டகைகக்குள் மாணிக்கக்கல் அகழ்ந்த 6 பேர் கைது

260

மாடு வளர்ப்பு (பட்டி) கொட்டகைக்குள் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்துகொண்டிருந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிட்வெல் செல்வகந்த தோட்டத்தில் 12.08.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவிலேயே இவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொசல்கமுவ ஒயா ஆற்றுப்பகுதியிலுள்ள செல்வகந்த தோட்டத்தில் மாடு வளர்ப்பு பட்டிக்குள் மாடு வளர்ப்பு பணியில் ஈடுபடுவதுபோல் இரகசியமாக மாணிக்கக்கல் அகழ்வு வேலையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தைச் சுற்றிவளைத்த பொலிஸார் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்துள்ளதுடன் தோண்டப்பட்ட மண்ணையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மண்ணை மாணிக்கக்கல் திணைக்களத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் அட்டன் மாவட்ட நீதீமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Arrest11

SHARE