வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் கோரிக்கைக்கிணங்க கடந்த 16.05.2016 அன்று தொடக்கம் வடக்குக்கு விஜயம் செய்த ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் வடக்கின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளை பார்வையிட்டு விரைவில் அவற்றின் அபிவிருத்திக்கு உதவுவதாக உறுதியளித்து சென்றிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 03.08.2016 மீண்டும் வடக்கிற்கு வருகை தந்த குறித்த ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் ஏற்கனவே உறுதியளித்ததற்கமைவாக மாகாணத்தில் சில வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்து அவற்றின் அபிவிருத்தி தொடர்பில் அவர்களால் தயாரிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் குறித்த திட்டங்களுக்கான அமைவிடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

