3000 கிலோ நிறையுடைய மீன் தொகையொன்று கடந்த 8 வருடங்களாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியில்!

238

3000 கிலோ நிறையுடைய மீன் தொகையொன்று கடந்த 8 வருடங்களாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நட்டத்தில் இயங்கிவரும் இந்த கூட்டுத்தாபனத்தின் சம்பள நிலுவை மற்றும் கடன்களைச் செலுத்துவதற்காக திறைசேறியிலிருந்து 6500 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.fish01

SHARE