யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா பொகோவா (Irina Bokova) நாளை (14) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
இரினா பொகோவா அந்த அமைப்பின் பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2030ம் ஆண்டில் இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இரினா பொகோவாவின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் எஸ்.பி நாவின்ன உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதுதவிர சீகிரியா உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க 08 இடங்களில் கண்காணிப்பு விஜயத்தினையும் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையில் அகஸ்ட் 16ம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ள சமாதனம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடலிலும் பங்கேற்க உள்ளார்.