நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனுவை தாக்கல் செய்ய கூட்டு எதிர்க்கட்சி தயாராவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிலைமைகளை அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதை தமது கட்சி எதிர்க்கவில்லை.
எனினும் அது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்அடிப்படையில் அமைந்துவிடக்கூடாது என்பதையே தாம் வலியுறுத்தி வருவதாக நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.