இந்த நாட்டை சீரழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை ஒரு காலமும் ராஜபக்ஷ குடும்பம் சம்மதிக்காது – நாமல் ராஜபக்ஷ

261

இந்த நாட்டை சீரழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை ஒரு காலமும் ராஜபக்ஷ குடும்பம் சம்மதிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
14-8-2016 ஞாயிற்றுக்கிழமை கினிகத்தேன நகரின் பீட்டாஸ் விருந்தகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்கா மற்றும் அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் எலபிரியந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியே மக்களின் வாக்குகளைப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் அன்று உறுதியளித்த நல்ல பல திட்டங்களை முன்னெடுப்பதைவிடுத்து ராஸபக்ஷ குடும்பத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே கங்கணம்கட்டிக்கொண்டு செயற்படுகின்றது. இந்த நாட்டில் எந்தவித அபிவிருத்தித் திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் ஏன் இந்த அரசாங்கத்தினை வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம் என அதிருப்தியடைந்துள்ளனர். இன்று பொருளாதார ரீதியில் இலங்கை மிகவும் பின்னடைவிலே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த நல்லாட்சி என்று கூறிக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கமே. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் வாக்களித்த மக்களுக்கு பொருத்தமாக இல்லை. ராஜபக்ஷ குடும்பத்தினரை ஒழித்துக்கட்டுவதை விட்டுவிட்டு வாக்களித்த மக்களுக்கு நல்ல பல திட்டங்களை முன்னெடுங்கள் என்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed (1) unnamed

SHARE