கட்சியை பிளவடையச் செய்யவே பாத யாத்திரை நடத்தப்பட்டது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு

232

download

கட்சியை பிளவடையச் செய்யவே பாதயாத்திரை நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட பாத யாத்திரைப் போராட்டம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவல்ல, கட்சியை பிளவடையச் செய்யவேயாகும்.

இவ்வாறான பாத யாத்திரைகளை நடத்துவதனால் அரசாங்கம் மேலும் பலமடையும்.

வலுவான அடிப்படையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை பாத யாத்திரைகளினால் அசைக்க முடியாது.

பாத யாத்திரையின் பின்னர் அரசாங்கத்திலும் கட்சியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றேன்.

நாட்டின் வரலாற்றில் காலத்திற்கு காலம் சவால்கள் ஏற்பட்ட போதிலும், மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிரத்தை காட்டி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

SHARE